உலக வனவிலங்கு நிதியம் (WWF)-இந்தியா அமைப்பின் நிதியுதவியின் கீழ், யானைகளின் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக வேண்டி வால்பாறை அருகே சரக்குப் பெட்டகங்களால் செய்யப்பட்ட இரண்டு ரேஷன் கடைகள் மிகவும் விரைவில் திறக்கப்பட உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் மராத்திய ராஜ்ய இராணுவ நிலப் பரப்பிற்கான மிகவும் முக்கியமான ஒருமுன்மொழிதலாக பரிந்துரைக்கப் பட்டுள்ளது என்பதோடு இதில் இதர மற்ற 11 கோட்டைகளும் அடங்கும்.
இந்தியக் கடற்படையானது ஐந்தாவது கோவா கடல்சார் கருத்தரங்கத்தினை (GMS-2024) கோவாவில் நடத்தியது.
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG), ஆசியாவிற்கான பிரதான தணிக்கை நிறுவனங்கள் அமைப்பின் (ASOSAI) 2024-2027 ஆம் ஆண்டிற்கான தலைமை பொறுப்பினை ஏற்றுள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பானது, இழப்பு மற்றும் சேதங்களுக்கான பல நிவர்த்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியத்தின் முதல் இயக்குநராக செனகல் நாட்டின் இப்ராஹிமா சேக் தியோங் நியமிக்கப் பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படை மற்றும் ஓமன் நாட்டின் விமானப் படை ஆகியவை ஓமனில் நடைபெற்ற ‘ஈஸ்டர்ன் பிரிட்ஜ் VII’ எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மற்றும் டெல்லியின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை ABHED (Advanced Ballistics for High Energy Defeat) எனப் படும் குறைந்த எடை கொண்ட குண்டு துளைக்காத மேலாடைகளை உருவாக்கி உள்ளன.
பிரதான் மந்திரி ஜன்ஜாதியா உன்னத் கிராம் அபியான் என்ற திட்டத்தின் சிறப்பான அமலாக்கத்திற்காக சமோலி மாவட்டத்தின் ஜோஷிமத் தொகுதியில் உள்ள மானா கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வசதிகளை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக வாகன ஓட்டிகளை ஒரு நாள் மகிழுந்து பயன்படுத்துவதை தவிர்க்க ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று உலக மகிழுந்து இல்லா தினம் கொண்டாடப் படுகிறது.
உலகப் பாலிவுட் தினம் ஆனது, இந்திய திரைத்துறையின் செழுமையான பாரம்பரியத்தையும் அதன் உலகளாவியச் செல்வாக்கையும் கொண்டாடச் செய்வதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
செப்டம்பர் 27, 2024 அன்று, கூகுள் நிறுவனம் தனது 26வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.