TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 1 , 2024 19 hrs 0 min 53 0
  • நீதிக்கட்சியின் தலைவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான P.T. இராஜன் அவர்களின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு, ‘தமிழ்வேள் P.T. இராஜன் நினைவுகளில் 50’ என்ற எண்ணிம வழியிலான நினைவேந்தலை தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார்.
  • கீழடியானது பாரம்பரியப் பகுதி என்ற பிரிவின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமமாக ஒன்றிய சுற்றுலா அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளது.
  • தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
  • மன்கிடியா என்ற ஒரு பழங்குடிச் சமூகம் ஆனது ஒடிசாவில் வனங்களின் மீதான வாழ்விட உரிமைகளைப் பெற்ற 6வது மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஒரு பழங்குடியினர் குழு ஆகும்.
  • மகாராஷ்டிரா அரசானது 17ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஒரு துறவியினைக் கௌரவிக்கும் வகையில் புனே விமான நிலையத்தின் பெயரினை 'ஜகத்குரு சந்த் துக்காராம் மஹாராஜ் புனே சர்வதேச விமான நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 10வது காமன்வெல்த் பாராளுமன்றச் சங்கத்தின் (CPA) இந்திய மண்டல மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆனது, எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை (DPI) செயல்படுத்துவது குறித்த தேசிய மாநாட்டை புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
  • பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் வினோத் பச்சன், இந்தியத் திரையுலகில் ஆற்றிய குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக ஐக்கியப் பேரரசின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் (பேரவையில்) மதிப்புமிக்க உலகளாவிய மேன்மைத்துவ விருதைப் பெற்றுள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டு SASTRA இராமானுஜன் பரிசு ஆனது, அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினைச் சேர்ந்த அலெக்சாண்டர் டன் என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
  • இந்தியா, கணினி பாதுகாப்பு சார்ந்த சிக்கல்களுக்கான எதிர் நடவடிக்கை குழு- மின்னாற்றல் துறையினை (CSIRT- POWER) புது டெல்லியில் தொடங்கியது.
    • இந்தியாவில் மின்னாற்றல் துறை எதிர்கொள்ளும் குறிப்பிட்ட இணையப் பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்