TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 3 , 2024 22 hrs 0 min 44 0
  • தமிழக முதல்வர் இராணிப்பேட்டையில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) மற்றும் டாடா மோட்டார் நிறுவன கார் உற்பத்தி ஆலையினை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது ஐக்கியப் பேரரசு - இந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்புடன் இணைந்து, விண்வெளியில் பெண்களின் தலைமைத்துவத் திட்டத்தினை (WiSLP) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) ஆளுநர்கள் குழுவின் ஒன்பதாவது வருடாந்திரக் கூட்டமானது நடைபெற்றது.
  • இந்திய அரசானது உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டத்தை (WTSA) புது டெல்லியில் நடத்த உள்ளது.
  • நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2வது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) தலைமைப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
  • மூத்த பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப் படவுள்ளார்.
  • ஏர் மார்ஷல் அமர் பிரசாத் சிங், விஆர் சவுதாரியை அடுத்து புதிய விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்றுள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டு வருடாந்திர சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி (AICE) நிகழ்வின் 10வது பதிப்பானது இத்தாலியின் பாரி நகருக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வானது உலக FZO 10வது உலக மாநாடு என்ற ஒரு புதிய பெயரில் துபாயில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்