FIFA உலகக் கோப்பை 2026 & FIFA மகளிர் உலகக் கோப்பை 2027 போட்டியின் அதிகாரப் பூர்வ நிதியளிப்பு நிறுவனமாக லேஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
8 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 8,000க்கும் மேற்பட்ட பல்வேறு தாவர இனங்களைக் கொண்ட, ஆக்ஸிஜன் உருவாக்கத்திற்கான அம்சங்கள் கொண்ட இந்தியாவின் முதல் பறவை பூங்காவானது மகாராஸ்டிரா மாநிலத்தில் நாக்பூர் நகருக்கு மிகவும் அருகில் அமைக்கப் பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா ஜப்பானின் 102வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
உலகின் வானூர்தி தளவாட விநியோகச் சங்கிலிக்கான முதன்மை மன்றமான ஏழாவது உலக வானூர்தி தளவாடங்கள் உச்சி மாநாடானது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது.