தமிழ்நாடு மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான திரு எஸ். தமிழ்வாணனை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் சென்னை சமூக சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து ‘தமிழ்நாட்டின் பழங்குடியினர் கலாச்சாரப் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் அளவிலான தேசிய ‘தொல்குடி’ மாநாட்டினை நடத்தின.
நிகழ்நேர வானிலை முன்னறிவிப்பு, மழைப்பொழிவு குறித்த தரவு, பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் நீர்த்தேக்க நிலைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக, தமிழ்நாடு அரசானது TN-Alert என்ற இருமொழியிலும் செயல்படும் கைபேசி செயலியை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகள் ஆனது 70 சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பான் நாட்டில் நிகாட்டா என்னுமிடத்தில் நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங், ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியினை 13:11.82 வினாடிகளில் நிறைவு செய்து தனது தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசானது வேத காலத்திலிருந்துத் திகழ்ந்து வரும் அவற்றின் முக்கியத்துவம் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு இன பசுக்களை 'இராஜ்யமாதா-கோமாதா' என்று அறிவித்துள்ளது.
இந்திய சர்க்கரை மற்றும் உயிரி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கமானது (ISMA) இந்திய சர்க்கரை மற்றும் உயிரி ஆற்றல் மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய எத்தனால் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான (LCA) தேஜாஸ் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை படைப்பிரிவுத் தலைவர் மோகனா சிங் பெற்றுள்ளார்.
மத்திய அரசானது, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த வகையிலான வாழ்க்கை முறைகள் தொடர்பான பல்வேறு நடத்தை மாற்றங்களைத் தூண்டுவதற்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான கருத்தாக்கங்களைப் பெறச் செய்வதற்காக Ideas4LiFE என்ற ஒரு இணைய தளத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்திய அரசானது, இந்தியாவில் 2029 ஆம் ஆண்டிற்குள் கப்பல் பயணச் சுற்றுலாவை சுமார் 1 மில்லியன் பயணிகள் என்ற ஒரு எண்ணிக்கையில் அதிகரிப்பதற்காகவும், சுமார் 400,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கச் செய்வதற்காகவும், 5 ஆண்டு கால பாரத் கப்பல் சுற்றுப்பயண திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.