மெட்டா நிறுவனமானது, புகைப்பட மற்றும் உரை செயல்முறையாக்க திறன்களுடன் கூடிய லாமா 3.2 எனப்படுகின்ற அதன் முதல் இலவச மென்பொருள் மாதிரியினை வெளியிட்டுள்ளது.
நிதி ஆயோக் அமைப்பின் மகளிர் தொழில்முனைவோர் தளத்தின் (WEP) ஒரு பிரத்யேக பிரிவினைப் பெற்ற இந்தியாவின் முதல் மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது.
இந்திய விமானப்படையானது, அதன் 92வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் ஒரு மாபெரும் வான்வழி சாகச கண்காட்சியை சென்னையில் நடத்தியது.
உலகப் பசுமைப் பொருளாதார மன்றமானது, "உலகளாவிய நடவடிக்கைகளை நன்கு மேம்படுத்துதல்: வாய்ப்புகளை உருவாக்கி, முன்னேற்றத்தினை ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் துபாயில் நடத்தப் பட்டது.
இந்திய இராணுவ செவிலியர் சேவை (MNS) படையானது, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று அதன் 99வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
இந்தியாவானது முதன்முறையாக 2025 ஆம் ஆண்டில் கோ கோ உலகக் கோப்பைப் போட்டியினை நடத்தவுள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஆர்போவைரஸ் மூலமான டெங்கு மற்றும் பிற நோய்களின் பாதிப்பு மீதான அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக உலகளாவிய உத்தித் தயார்நிலை, ஆயத்த நிலை மற்றும் எதிர் நடவடிக்கைக்கான செயல்திட்டம் அல்லது SPRP என்ற செயல் திட்டத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.
இடகுஞ்சி மகாகணபதி யக்ச கானா மண்டலி கெரமானே என்பது, தொட்டுணர முடியாத மகத்தான கலாச்சார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ உடன்படிக்கையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது (யக்ச கானா என்ற நடனத்தின் முன்னேற்றத்திற்காக).
க்ராத்தான் என்ற ஒரு சூறாவளியானது தைவானின் முக்கியத் துறைமுக நகரமான கயோசியுங்கில் கரையைக் கடந்தது.