சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
63,246 கோடி ரூபாய் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% மத்திய அரசின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டம் ஆனது ‘மத்திய அரசின் நிதியுதவிப் பெறும்’ திட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவை இணைந்து நடத்திய கடல்சார் கார்பன் நீக்கம் குறித்த மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது 4வது தலைமுறை தொழில் நுட்பம் சார்ந்த தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சிறிய அளவிலான மிகக் குறுகிய தூர செயல்பாட்டு வரம்புடைய வான் வழிப் பாதுகாப்பு அமைப்பின் (VSHORADS) வான் வழி சோதனைகளை பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தியது.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை விஞ்சி எலோன் மஸ்க்கிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிகவும் பெரிய பணக்காரர் ஆக மார்க் ஜூக்கர்பெர்க் மாறியுள்ளார்.
தைவான் அரசானது அமெரிக்காவிடமிருந்து 100 நிலச் செயல்பாடு சார்ந்த ஹார்பூன் ரக கப்பல் எதிர்ப்பு எறிகணை அமைப்புகளின் முதல் ஏற்றுமதி தொகுதியினைப் பெற்றுள்ளது.