கட்டுமானங்களில் எஞ்சும் குப்பைகள், கழிவுநீர் மற்றும் கழிவுகளை பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் சட்ட விரோதமாகக் கொட்டும் நிகழ்வுகள் குறித்து புகார் அளிப்பதற்காக சென்னை மாநகராட்சிக் கழகம் ஆனது 1913 எனப்படும் 24 மணி நேர உதவி எண் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
நான்கு ஆய்வுக் கப்பல்களின் வரிசையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது கப்பலான (பெரியது) ஐஎன்எஸ் நிர்தேஷாக் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளது.
வால்மீகி புலிகள் வளங்காப்பகம் அதன் முழு விலங்குகள் எண்ணிக்கையினை எட்ட இருப்பதால் கைமூர் வனவிலங்கு சரணாலயத்தை அதன் இரண்டாவது புலிகள் வளங் காப்பகமாக பீகார் அரசு மேம்படுத்த உள்ளது.
மில்டன் புயலானது ஃப்ளோரிடா மாகாணத்தின் (அமெரிக்கா) மேற்கு கடற்கரையில் கரையைக் கடந்தது.
இம்மானுவேல் சேகரனின் 100வது பிறந்தநாள் (அக்டோபர் 9) சமீபத்தில் அனுசரிக்கப் பட்டது.
தனது 18 வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அவர் 1957 ஆம் ஆண்டில் அவரது 33 வயதில் கொலை செய்யப் பட்டார்.