தென்னாப்பிரிக்காவில் (சிமோன் நகரம்) நடைபெறும் IBSAMAR எனப்படும் இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகளின் எட்டாவது கூட்டு பன்னாட்டு கடல்சார் பயிற்சியில் INS தல்வார் பங்கேற்கிறது.
இந்திய உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் (ICFA) மற்றும் ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வேளாண்மை மற்றும் நீர் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான தொழில்நுட்பப் புத்தாக்க மையம் (TIF – AwaDH) ஆகியவை இணைந்து நடத்திய 2024 ஆம் ஆண்டு இந்திய எண்ணிம வேளாண்மை மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
லாவோவின் வியன்டியானே நகரில் நடைபெற்ற 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் (EAS) இந்தியா பங்கேற்றது.
மத்திய அரசானது, இந்துஸ்தான் விமானவியல் லிமிடெட் (HAL) நிறுவனத்தினை 14வது மகாரத்னா அந்தஸ்து பெற்ற மத்தியப் பொதுத்துறை நிறுவனமாக (CPSE) மேம்படுத்தி உள்ளது.
யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநர், மொராக்கோவின் ரபாத் நகரினை 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் புத்தகத் தலைநகராக அறிவித்துள்ளார்.