TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 10 , 2018 2140 days 637 0
  • மத்திய அரசாங்கமானது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் குழந்தைப் பருவ புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது ஒருவர் தனது வாகனத்தை விற்கும் போதும் பதிவு செய்யும்போதும் மூன்றாம் நபருக்கான காப்பீட்டுக் கொள்கையாக நான்கு சக்கர வாகனங்களுக்கு 3 வருட காப்பீட்டுக் கொள்கையும் இரு சக்கர வாகனங்களுக்கு 5 வருட காப்பீட்டுக் கொள்கையும் அவசியம் என்று அறிவித்துள்ளது.
    • உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி K.S. ராதாகிருஷ்ணன் தலைமையிலான சாலை பாதுகாப்பு மீதான உச்சநீதிமன்ற குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO - Chief Executive Officer) டாக்டர் இந்து பூஷன் என்பவரால் ஆயுஷ்மான் பாரத் தகவல் அளிக்கும் மையம் பெங்களூருவில் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவின் ஏஸ் ஸ்பிரிண்டரான ஹீமா தாஸ் வட கிழக்கு மாநிலத்தின் வளரும் விளையாட்டு வீரர்களை பெரிதாக சாதிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் இளைய தலைமுறையினர் விளையாட்டை தீவிரமாக பின்பற்றும் வகையிலும்  அஸ்ஸாமின் விளையாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நோவாக் ஜோகோவிக் தனது மூன்றாவது அமெரிக்க ஓபன் பட்டத்தைப் பெற்றார். இவர் உலகத் தரவரிசையில் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி ஒட்டுமொத்தமாக 14-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்