பாரத் 6G அலையன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த சர்வதேச 6G கருத்தரங்கம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
சத்தீஸ்கரில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) நிறுவனமானது, நாட்டின் 216வது AMRIT (மலிவு விலையிலான மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கான நம்பகமான உள்வைப்பு சாதனங்கள்) மருந்தகத்தினைத் திறந்து வைத்துள்ளது.
நிதி ஆயோக் அமைப்பானது இரண்டாவது சர்வதேச மெத்தனால் கருத்தரங்கம் மற்றும் 2024 ஆம் ஆண்டு கண்காட்சி ஆகியவற்றை புது டெல்லியில் நடத்தியது.
புது டெல்லியில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடவர்களுக்கான 3 நிலைகளிலான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
அரசு ஊழியர்களின் மிகவும் தனிப்பட்ட மற்றும் நிறுவனத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘கர்மயோகி சப்தா’ என்ற தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்திய இராணுவத்தின் சுதர்சன் சக்ரா படைப்பிரிவானது, உத்தரப் பிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில் “ஸ்வாவ்லம்பன் சக்தி பயிற்சி” என்ற முக்கியப் பயிற்சியை நடத்தி வருகிறது.