அடுத்த ஆண்டு ஜனவரி 08 முதல் 10 ஆம் தேதி வரை 18வது பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்வினை ஒடிசா அரசானது, புவனேஸ்வர் நகரில் நடத்தவுள்ளது.
பவன சித்ரா என்றழைக்கப்படும் "உலகின் முதல் தானியங்கு உட்புற காற்றுத் தரக் கண்காணிப்பு" அமைப்பினைப் பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையமாக திருவனந்தபுரம் விமான நிலையம் மாறியுள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் ஓமன் கடற்படை ஆகியவையானது சமீபத்தில் 'நசீம் அல் பஹ்ர்' என்ற இருதரப்பு கடற்படைப் பயிற்சியை கோவா கடற்கரையில் மேற் கொண்டன.
இந்தியக் கடலோரக் காவல்படையானது, குஜராத் மற்றும் ஒன்றியப் பிரதேசமான டாமன் & டையூ பகுதிகளில் ‘சாகர் கவாச்’ என்ற கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியினை வெற்றிகரமாக நடத்தின.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ICC T20 உலகக் கோப்பைப் போட்டியில், முதல் முறையாக நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆனது தென்னாப்பிரிக்க அணியினை வீழ்த்தி 23 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையினைக் கைப்பற்றியது.
பேரிடர் அபாயக் குறைப்பு (APMCDRR) தொடர்பான 2024 ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் மாநாடு ஆனது பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் நடைபெற்றது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்திக்கு, 2024 ஆம் ஆண்டு பேட்ரிக் J. மெக்கவர்ன் என்ற விருதுகளின் ஒரு பகுதியாக இந்திய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற மனிதாபிமானச் சேவையாளரும் மற்றும் ஆன்மீகத் தலைவரான மோகன்ஜிக்கு, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 2024 ஆம் ஆண்டு கான்சியஸ் கம்பெனி விருதுகளில் மனிதாபிமான விருதானது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ்குமார் ஹிரானிக்கு மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் தேசிய கிஷோர் குமார் விருது வழங்கப்பட்டது.