TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 26 , 2024 35 days 87 0
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று நடைபெறும் 14வது ஏரிகள் மாநாடு ஆனது கர்நாடகாவின் மூட்பித்ரி என்னுமிடத்தில் ‘Lake 2024 – wetlands for human wellbeing’ என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • ஆஸ்கர் சூறாவளியானது கிழக்கு கியூபாவில் உள்ள பராகோவா நகருக்கு அருகே வெப்பமண்டலப் புயலாகக் கரையைக் கடந்தது.
  •  ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிகக் கனமழையை ஏற்படுத்திய டாணா புயல் ஆனது சமீபத்தில் ஒடிசா கடற்கரையில் கரையைக் கடந்தது.
    • இதற்கு கத்தார் நாட்டால் பெயரானது முன்மொழியப் பட்டது.
  • இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் ஆனது, இரு நாடுகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களும் திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களில் கூட்டுறவினை மேற்கொள்ள உதவும் வகையிலான ஒலி-ஒளி இணைத் தயாரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்திய விமானப் படை (IAF) மற்றும் சிங்கப்பூர் விமானப் படை ஆகியவை மேற்கு வங்கத்தில் கலைக்குண்டா விமானப் படை மையத்தில் 12வது கூட்டு இராணுவப் பயிற்சியில் (JMT) பங்கேற்கின்றன.
    • இந்தியாவானது தனது இராணுவப் பயிற்சி வசதிகளை வழங்குகின்ற ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்