தமிழக அரசானது, மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், 42 நகரங்களுக்கான நீண்டகால மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிக்கும் பணியை நான்கு ஆலோசனை வழங்கீட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்ட நிர்வாகமானது, அரக்கோணத்தில் உள்ள இராஜாளி எனும் இந்தியக் கடற்படை நிலையத்திலிருந்து (INS) பறவைகள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக என்று அதனைச் சுற்றி குறைந்தது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆறு கிராமப் பஞ்சாயத்துகளில் இருந்து உருவாகும் கழிவுகளை கையாளுவதற்காக வேண்டி, நவீன உரக்கூடம் அமைக்க உள்ளது.
ஒப்பந்த ஊழியர்களும் மகப்பேறு கால சலுகைகளைப் பெறுவதற்கு என்று உரிமை உடையவர்கள் என்றும், இந்த சலுகைகள் எதுவும் மறுக்கப்பட்டால் அல்லது குறைந்த அளவில் சாதகமானப் பலன்கள் வழங்கப் பட்டால், ஒப்பந்த விதிகளுக்கு எதிராக 1961 ஆம் ஆண்டின் மகப்பேறுச் சட்டத்தின் விதிகள் பொருந்தும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய நிலக்கரி அமைச்சகம் நடத்திய மதிப்பாய்வில் 2022-23 ஆம் ஆண்டிற்கான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனத்தின் லிக்னைட் மற்றும் நிலக்கரிச் சுரங்க நிறுவனம் அதிக மதிப்பெண்கள் மற்றும் ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன.
மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் விஜய ரஹத்கர் தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள சிறப்பு நாடாளுமன்றக் குழுவானது, வழக்கமான பதவி நிலைக் கொள்கையைத் தவிர்த்து, அதன் அடுத்தத் தலைமை நீதிபதியாக நீதிபதி யாஹ்யா அப்ரிடியை நியமித்துள்ளது.
கால்பந்து வீராங்கனையான மணிப்பூரின் பாலா தேவி, சர்வதேசப் போட்டிகளில் 50 கோல்களை அடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.