TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 29 , 2024 24 days 62 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசு நடத்திய 2024 ஆம் ஆண்டு அமராவதி ஆளில்லா விமானங்கள் உச்சி மாநாடு ஆனது, 11,000 பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது.
  • இந்திய இராணுவத்தின் முதன்மையான சர்வதேச கருத்தரங்கான இரண்டாவது சாணக்கியா பாதுகாப்புப் பேச்சுவார்த்தையானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • 14வது அகில இந்தியக் குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையினர் மாநாடு ஆனது குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது.
  • மத்திய அரசானது, கால்நடை எண்ணிக்கை குறித்த பல்வேறு தரவுகளை மேம்படுத்தச் செய்வதற்கான 21வது கால்நடை கணக்கெடுப்பினைத் தொடங்கியது.
  • ஐரோப்பிய ஒன்றியம் சாகரோவ் பரிசு எனப்படும் அதன் மனித உரிமைகளுக்கான உயர்மட்டப் பரிசினை, வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களான மரியா கொரினா மச்சாடோ மற்றும் எட்மண்டோ கோன்சலஸ் உருட்டியா ஆகியோருக்கு வழங்கியுள்ளது.
  • உலகளாவியத் தொழில் துறை அமைப்பான சர்வதேச தாமிர சங்கம் (ICA) ஆனது, ஆதித்யா பிர்லா குழும நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தினை அதன் புதிய உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளது.
  • சிங்கப்பூர்-இந்தியா இடையிலான  31வது கடல்சார் இருதரப்பு பயிற்சியானது (SIMBEX) விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
  • கோவாவில் உள்ள மர்மகோவா துறைமுக ஆணையம் ஆனது, அதன் ஹரித் ஷ்ரே திட்டத்திற்காக சுற்றுச்சூழல் கப்பல் குறியீட்டு (ESI) தளத்தில் பட்டியலிடப்பட்ட முதல் இந்தியத் துறைமுகம் ஆனது.
  • இந்தியாவின் தலைசிறந்த மகளிர் மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் ‘Witness’ என்ற தலைப்பில் தனது நினைவுக் குறிப்பை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்