TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 30 , 2024 31 days 105 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்துடன் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த மாநில அளவிலான இணையவெளிக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை தொடங்கியுள்ளது.
  • எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பெருமளவு உருவாக்கத் தேவையான அமைதியான மற்றும் மிக ஆக்கப் பூர்வமான சூழலைக் கொண்டுள்ளதால், டேஹ்ராடூனுக்கு அருகிலுள்ள தானோ கிராமம் ஆனது, ‘எழுத்தாளர்களின் கிராமம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாAI மற்றும் மெட்டா ஆகியவை ராஜஸ்தானின் ஜோத்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஸ்ரீஜன் எனப்படுகின்ற ஆக்கப் பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு மையத்தினை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளன.
  • புது டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் இந்தியாவின் முதல் நிலக்கரிக் கலைக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.
  • பணியில் இருக்கும் போது உயிரிழந்த இராணுவ உளவுத்துறை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் புனேவில் சதார்க் பூங்கா என்ற ஒரு புதிய நினைவகம் திறக்கப்பட்டுள்ளது.
  • கூகுள் நிறுவனமானது அதன் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களுக்கு ஆற்றலை வழங்குவதற்குத் தேவையான மிக அதிக அளவிலான ஆற்றலை உருவாக்குவதற்காக சிறிய அணு உலைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • ராட்க்ளிஃப்-ஆன்-சோர் எனுமிடத்தில் உள்ள 1967 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த ராட்கிளிஃப்-ஆன்-சோர் எனப்படுகின்ற ஐக்கியப் பேரரசின் கடைசி நிலக்கரி மின் நிலையமானது சமீபத்தில் தனது செயல்பாடுகளை நிறைவு செய்துள்ளது.
  • சுமார் 3.53 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஆப்பிள் நிறுவனத்தினை முந்தி என்விடியா நிறுவனம் ஆனது உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறி உள்ளது.
  • டாடா எஃகு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான T.V. நரேந்திரன் உலக எஃகுச் சங்கத்தின் (வேர்ல்ட் ஸ்டீல்) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய எஃகு ஆணைய லிமிடெட் (SAIL) நிறுவனம் ஆனது ‘உள்ளடக்கம், சமபங்கு & பன்முகத் தன்மை’ பிரிவிலும், ‘நியமிக்கப்பட்டுள்ள பணியாளர் வளங்களை மேலாண்மை செய்வதில் சிறந்து விளங்குதல்’ ஆகிய பிரிவிலும் SHRM – மனித வள மேம்பாட்டுத் துறையின் (HR) சிறப்பு விருதுகளைப் பெற்று உள்ளது.
  • நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் மாதம் – செப்டம்பர் மாதம்) இந்தியாவின் கற்கரி இறக்குமதியானது, 6 ஆண்டுகளில் இல்லாத ஒரு அளவிற்கு 29.6 மில்லியன் டன்களாக (மெட்ரிக் டன்) பதிவாகியது.
    • ரஷ்யாவிலிருந்து வரும் இறக்குமதிகள் ஆனது இந்த காலக்கட்டத்தில் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்