தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகமானது 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான (IFFI) "கவன ஈர்ப்பு நாடாக" ஆஸ்திரேலியாவை அறிவித்துள்ளது.
மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் ஆனது, 2025 ஆம் ஆண்டில் இந்தியர்களால் பயணம் மேற்கொள்ள அதிகம் விரும்பப்படும் இடமாக மாறியுள்ளது.
நடிகர் தாராசிங் குரானா, மனநலப் பிரச்சனைகள் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக 'Commonwealth Year of Youth Champion' என்னும் மகாத்மா காந்தி தலைமைத்துவ விருதைப் பெற்றுள்ளார்.
11வது ஆசிய தூய்மை ஆற்றல் உச்சி மாநாடு (ACES) ஆனது சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது.
இந்திய இராணுவத் தளவாட ஏற்றுமதிக்கான முதல் மூன்று வாடிக்கையாளர்களாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் உருவெடுத்துள்ளன.
உலகளாவியச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வரைபடம் எனப்படுகின்ற ஒரு புதிய வளங்காப்பு முன்னெடுப்பானது, பல உலகளாவியச் சுற்றுச்சூழல் அமைப்புகளை வரைபடமாக்குவதற்கும் அவற்றைக் கண்காணிப்பதற்குமான ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த வளத்தை வழங்குவதற்கான முன்னெடுப்பாகத் தொடங்கப் பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் பரஸ்பர நிதியின் மொத்த முதலீட்டாளர் எண்ணிக்கையானது 50.1 மில்லியனாக உயர்ந்துள்ளது.