2018 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆயுஷ் பிரிவில் (Ayush Block) நோயாளிகளுக்கு வர்ம சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் மலர்வதை கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டமானது செப்டம்பர் 12 ஆம் தேதியை ‘குறிஞ்சி மலர் தினமாக’ அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
நீலகிரியில் வெவ்வேறு வகையான 9 வகை குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. இந்தியா முழுவதும் 32 வகையான குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன.
உறுப்பு தானத்திற்காக காத்திருப்போர் பதிவேட்டில் இந்தியர்கள் பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN - Transplant Authority of Tamilnadu) அறிவித்துள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களது தூதரகத்தில் ‘தடையின்மைச் சான்றிதழைப்’ பெற்று TRANSTAN-ல் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவிற்குப் பிறகு அவரது நினைவாக லக்னோவின் புகழ்பெற்ற ‘ஹஸ்ரத்கன்ஞ் சவ்ராஹா’ ஆனது ‘அடல் சவுக்’ என்று பெயர் மாற்றப்படவிருக்கிறது.
மேலும் உத்திரப் பிரதேச மாநில அரசானது ஆக்ராவின் பட்டேஸ்வரில் உள்ள வாஜ்பாயின் முன்னோர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாகவும் சுற்றுலாத் தளமாகவும் மாற்ற முடிவு செய்துள்ளது.
மத்தியப் பணியாளர், பொது மக்கள் குறைபாடுகள், ஓய்வூதியத் துறை அமைச்சகமானது மத்தியப் பிரதேசத்தின் போபாலில் ‘நல்லாட்சியுடன் கூடிய உயர் இலட்சிய மாவட்டங்களில் கவனத்தை செலுத்துதல்’ மீதான பிராந்தியக் கருத்தரங்கை நடத்தியது.
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தில் உள்ள லிப்பா-அசரா வனவிலங்கு சரணாலயத்தின் 4000 மீட்டர் உயரத்தில் பனி சிறுத்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பனிச் சிறுத்தையானது ‘அழிவு நிலை இனங்கள்’ எனும் வகைப்பாட்டில் இருந்து ‘மறையத்தகு உயிரினங்கள்’ எனும் வகைப்பாட்டிற்கு பாதுகாப்புப் பட்டியலில் நிலை மாற்றப்பட்டுள்ளது.
டிரிபிள் ஜம்பரான அர்பிந்த் சிங் IAAF காண்டினன்டல் கோப்பையில் பதக்கம் வென்ற முதலாவது இந்திய வீரர் ஆவார். இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
கம்போடியாவின் பிரதமராக ஹூன் சென் மறுமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அர்ஜெண்டினாவின் மென்டோசாவில் G20-ன் முதலாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மீதான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
வளைகுடா நாடுகளில் முதலாவதாக கத்தார் நாடானது சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அட்டைகள் மற்றும் சில உரிமைகளை வழங்கவிருக்கிறது.
இந்தப் புதிய விதியின்படி, புதிய நிரந்தர குடியிருப்பு அட்டைகளைப் பெற்றவர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார்கள். மேலும் இந்த அடையாள அட்டையைப் பெற்றவர்கள் கல்வி, சுகாதார சேவைகள் உள்பட கத்தார் நாட்டின் நல உதவிகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
வங்காள தேசத்தின் கடற்படை கப்பலான ’சமுத்ரா ஜாய்’ நல்லிணக்கப் பயணமாக 4 நாட்களுக்கு விசாகப்பட்டினம் (கிழக்குக் கடற்படை) வந்தடைந்தது.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் (IISER - Indian Institute of Science Education) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மலிவு விலையிலான மற்றும் நெகிழத்தக்க சூரிய மின்கலத்தை வைட்டமின் B12-ன் செயற்கை வகையைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.
அமெதியின் பிந்தாரா தாக்கூர் கிராமத்தில் உள்ள மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொது சேவை மையத்தில் “டிஜிட்டல் கிராமத்தை” மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி துவக்கி வைத்தார்.
டிஜிட்டல் கிராமத் திட்டத்தின்படி, வை-பை அளிக்கும் இடம், LED விளக்கு தயாரித்தல், சுகாதாரத் துணிகள் தயாரிக்கும் பிரிவு மற்றும் பிரதம மந்திரி டிஜிட்டல் கல்வி முன்முயற்சி உள்ளிட்ட 206 திட்டங்கள் மக்களுக்கு அளிக்கப்படும்.
அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைப் பெற்ற முதலாவது ஜப்பானியப் பெண் வீராங்கனையாக நவோமி ஒசாகா உருவெடுத்துள்ளார்.
புது தில்லியில் பித்யூத் சக்கரவர்த்தி எழுதிய ‘இந்திய அரசியலமைப்பியல் - ஒரு கருத்துத் திட்டம்’ என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டார்.