எத்தனால், மெத்தனால், பயோ-டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) போன்ற மாற்று எரிபொருளில் இயங்கும் பேருந்துகள், வணிக ரீதியிலான கார்கள், கைவண்டிகள் போன்றவைகளை இயக்க அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இராமேசுவரத்தில் குறைந்த விலையிலான காற்றின் தரத்தை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் உதவ இருக்கிறது. இந்த அமைப்பானது மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள காற்று ஆராய்ச்சி ஆய்வகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தரவுடன் விவேகானந்தா கேந்தராவில் ஏற்படுத்தப்படவிருக்கிறது.
ஈரப்பதம், வெப்பநிலை, கார்பன்-டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றுடன் வளிமண்டலத்தில் உள்ள PM10 மற்றும்5 நிலைகள் ஆகியவற்றின் தகவல்களை இது அளிக்கும்.
இந்தியாவின் பீகார் மற்றும் நேபாளம் ஆகியவற்றுக்கு இடையேயான முதலாவது பேருந்து சேவையை பாட்னாவில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் துவக்கி வைத்தார்.
“இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்கள்” என்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் (WIFT - Women in Film and Television) போது ஐஸ்வர்யா ராய் பச்சான் கௌரவிக்கப்பட்டார்.
பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பெண்களின் திறமைகளை கௌரவிப்பதற்காக இவ்விருது ஏற்படுத்தப்பட்டது.
ஹைதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வெர்மா பட்டம் பெற்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி மற்றும் சிரக் செட்டி ஆகியோரும் பட்டம் பெற்றனர்.
கிரிகிஸ்தான் குடியரசு நாட்டுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக அசோக் அமிதாப் திமிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸர்பைஜான் குடியரசு நாட்டுக்கான இந்தியத் தூதுவராக வன்லால்வானா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் முதல் முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது.
எதிர்கால மாற்றத்தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவிற்கான சர்வதேச மையத்தை அமைப்பதற்காக நிதி ஆயோக், இன்டெல் மற்றும் டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் (TIFR) ஆகியவை கூட்டு பணியாற்றுகின்றன.
இந்த கூட்டிணைவானது முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய இரயில்வே அமைச்சகமானது ரயில் சயோக் வலைப்பக்கத்தை தொடங்கியுள்ளது. இது இரயில் நிலையங்களில் பெறுநிருவனங்களுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மேம்பட்ட வசதிகளை பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதிமூலம் அமைப்பதற்கான மேடையை வழங்குகிறது.
பரத்பூரில் பாரம்பரிய உடைமைகளை பேணிகாப்பதற்காகவும், பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் மாநாடு ஒன்றை நடத்த இராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது இந்திய பாரம்பரிய தங்கும் விடுதி கூட்டிணைவு (IHHA - Indian Heritage Hotels Association) மூலம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) திறன்மூலம் சுற்றுச்சூழல் சவால்களை தீர்க்க மக்களையும் மற்ற நிறுவனங்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “பூமிக்காக செயற்கை நுண்ணறிவு” (AI for Earth) திட்டத்திற்கு நிதி பெறுபவராக ஏழு பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அடுத்ததாக பூமிக்காக செயற்கை நுண்ணறிவிற்கு அதிகபட்ச கொடை பெறும் நாடாக இந்தியா மாறியுள்ளது.