TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 2 , 2024 64 days 104 0
  • ‘அபய்’ எனப்படுகின்ற ஆழமற்ற நீர்ப் பரப்பில் இயங்கும் ஏழாவது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலானது (ASW SWC) சமீபத்தில் சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • ஜம்மு & காஷ்மீர் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூலிகைகள் குறித்த பாரம்பரியத் தகவலறிவின் பாதுகாவலர்களுக்கு மூலிகை காப்புரிமை வழங்கப் பட்டு உள்ளது.
  • மும்பையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஆசியாவின் கை வலு மல்யுத்தக் கோப்பை போட்டியில் ஒட்டு மொத்த அணிகளின் தரவரிசையில் இந்தியாவானது இரண்டாம் இடத்தினைப் பெற்றது.
  • ஸ்பெயின் நாட்டுக் கால்பந்து வீரர்களான ரோட்ரி மற்றும் ஐடானா போன்மடி ஆகியோர் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களாக ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் பலோன் டி'ஓர் விருதுகளை வென்றுள்ளனர்.
  • ரவிசங்கர் அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் வாழும் கலை அறக்கட்டளை மூலமாக அவர் ஆற்றி வரும் உலகளாவியப் பணிக்காக பிஜி நாட்டின் உயரிய குடிமை விருதான "தி ஆர்டர் ஆஃப் பிஜி கௌரவ அதிகாரி" என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
  • சைடஸ் லைப்சைன்ஸ்  லிமிடெட் நிறுவனம் ஆனது ZyVac TCV எனப்படுகின்ற அதன் டைபாய்டு Vi இணை தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பிடமிருந்து கொள்கை சார் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
  • 'பரத்வாக்யா' என்ற தலைப்பில் உருவாக்கப் பட்டுள்ள செவ்வியல் இசைக் கலைஞர் பாரத் பால்வல்லி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் பிரதமர் வெளியிட்டார்.
  • M.K. ரஞ்சித்சிங் "Mountain Mammals of the World" என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • 75வது சர்வதேச விண்வெளி மாநாடு (IAC) ஆனது இத்தாலியின் மிலன் நகரில் நடத்தப் பட்டது.
    • இந்த நிகழ்வின் கருத்துரு, "Responsible Space for Sustainability" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்