‘அபய்’ எனப்படுகின்ற ஆழமற்ற நீர்ப் பரப்பில் இயங்கும் ஏழாவது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலானது (ASW SWC) சமீபத்தில் சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அறிமுகப் படுத்தப்பட்டது.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூலிகைகள் குறித்த பாரம்பரியத் தகவலறிவின் பாதுகாவலர்களுக்கு மூலிகை காப்புரிமை வழங்கப் பட்டு உள்ளது.
மும்பையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு ஆசியாவின் கை வலு மல்யுத்தக் கோப்பை போட்டியில் ஒட்டு மொத்த அணிகளின் தரவரிசையில் இந்தியாவானது இரண்டாம் இடத்தினைப் பெற்றது.
ஸ்பெயின் நாட்டுக் கால்பந்து வீரர்களான ரோட்ரி மற்றும் ஐடானா போன்மடி ஆகியோர் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களாக ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் பலோன் டி'ஓர் விருதுகளை வென்றுள்ளனர்.
ரவிசங்கர் அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் வாழும் கலை அறக்கட்டளை மூலமாக அவர் ஆற்றி வரும் உலகளாவியப் பணிக்காக பிஜி நாட்டின் உயரிய குடிமை விருதான "தி ஆர்டர் ஆஃப் பிஜி கௌரவ அதிகாரி" என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
சைடஸ் லைப்சைன்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது ZyVac TCV எனப்படுகின்ற அதன் டைபாய்டு Vi இணை தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பிடமிருந்து கொள்கை சார் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
'பரத்வாக்யா' என்ற தலைப்பில் உருவாக்கப் பட்டுள்ள செவ்வியல் இசைக் கலைஞர் பாரத் பால்வல்லி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் பிரதமர் வெளியிட்டார்.
M.K. ரஞ்சித்சிங் "Mountain Mammals of the World" என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தினை எழுதியுள்ளார்.
75வது சர்வதேச விண்வெளி மாநாடு (IAC) ஆனது இத்தாலியின் மிலன் நகரில் நடத்தப் பட்டது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Responsible Space for Sustainability" என்பதாகும்.