TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 3 , 2024 63 days 126 0
  • சுமார் 700 என்ற அபாயகரமானக் காற்றுத் தரக் குறியீட்டுடன் (AQI) லாகூர் நகரானது மீண்டும் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது.
  • வாக் பக்ரி தேயிலைக் குழுமம் ஆனது, ஹுருன் இந்தியா நிறுவனத்தின் "இந்தியப் பொருளாதாரத்தில் சிறந்தப் பங்களிப்பினை ஆற்றியதற்கான தலைமுறை மரபு விருதை" பெற்றுள்ளது.
  • மத்திய அரசானது, இந்தியத் தொலைபேசி எண்களாகக் குறிப்பிடப்பட்டு வரும் சர்வதேச அழைப்புகளை அடையாளம் கண்டு தடுக்கும் 'சர்வதேச மோசடி அழைப்புகளைத் தடுக்கும் அமைப்பினை' அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சர்வதேசத் தகவல் தொடர்பு ஒன்றியத்தின் (ITU) 15வது Kaleidoscope Academic Conference எனும் மாநாடானது, "நிலையான உலகிற்கான புத்தாக்க மற்றும் எண்ணிம மாற்றம்" என்ற கருத்துருவின் கீழ் புது டெல்லியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்