TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 6 , 2024 19 days 62 0
  • ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் 67வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் M.அப்பாவு பங்கேற்கிறார்.
  • வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா, ‘Speaking with Nature’ என்ற தனது சமீபத்தியப் புத்தகத்தினை சென்னையில் வெளியிட்டார்.
  • 2033 ஆம் ஆண்டளவில் இந்தியா ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 டிரில்லியன் இணைய வெளித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதோடு இந்த எண்ணிக்கை 2047 ஆம் ஆண்டில் 17 டிரில்லியனாக உயரும்.
  • இந்தியாவின் மிகப்பெரிய ஜன் ஔஷதி கேந்திரா ஆனது, புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (AIIMS) திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கோடீஸ்வர வரி செலுத்துவோர் எண்ணிக்கையானது 2014 ஆம் மதிப்பீட்டு ஆண்டுடன் ஒப்பிடும் போது, ​​ 2024 ஆம் வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் (AY) ஐந்து மடங்கு அதிகரித்து 2.2 லட்சமாக அதிகரித்துள்ளது.
  • ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சமீபத்திய புதியத் தகவலின் படி, கிராமப் புற இந்தியாவின் 95% நிலப் பதிவுகள் முழுமையாக எண்ணிம மயமாக்கப்பட்டுள்ளன.
  • முதலாவது பருவநிலை மற்றும் சுகாதார ஆப்பிரிக்கா மாநாடு (CHAC 2024) ஆனது ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது.
  • மேற்கு வங்காளத்தில் உள்ள இந்திய-வங்காளதேச எல்லையில் பெட்ராபோல் என்னும் இடத்தில் உள்ள நிலம் சார் துறைமுகத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பயணியர் முனைய கட்டிடம் மற்றும் ‘மைத்ரி துவார்’ என்ற சரக்குப் போக்குவரத்து வாயில் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
  • மேம்படுத்தப் பட்ட உயிரித் தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் உணவுத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக பஞ்சாபில் உள்ள மொஹாலி எனுமிடத்தில் BRIC – தேசிய வேளாண் உணவு உற்பத்திக் கல்வி நிறுவனத்தினை (BRIC-NABI) அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்