ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் 67வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் M.அப்பாவு பங்கேற்கிறார்.
வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா, ‘Speaking with Nature’ என்ற தனது சமீபத்தியப் புத்தகத்தினை சென்னையில் வெளியிட்டார்.
2033 ஆம் ஆண்டளவில் இந்தியா ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 டிரில்லியன் இணைய வெளித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதோடு இந்த எண்ணிக்கை 2047 ஆம் ஆண்டில் 17 டிரில்லியனாக உயரும்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜன் ஔஷதி கேந்திரா ஆனது, புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (AIIMS) திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோடீஸ்வர வரி செலுத்துவோர் எண்ணிக்கையானது 2014 ஆம் மதிப்பீட்டு ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024 ஆம் வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் (AY) ஐந்து மடங்கு அதிகரித்து 2.2 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சமீபத்திய புதியத் தகவலின் படி, கிராமப் புற இந்தியாவின் 95% நிலப் பதிவுகள் முழுமையாக எண்ணிம மயமாக்கப்பட்டுள்ளன.
முதலாவது பருவநிலை மற்றும் சுகாதார ஆப்பிரிக்கா மாநாடு (CHAC 2024) ஆனது ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள இந்திய-வங்காளதேச எல்லையில் பெட்ராபோல் என்னும் இடத்தில் உள்ள நிலம் சார் துறைமுகத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பயணியர் முனைய கட்டிடம் மற்றும் ‘மைத்ரி துவார்’ என்ற சரக்குப் போக்குவரத்து வாயில் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
மேம்படுத்தப் பட்ட உயிரித் தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் உணவுத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக பஞ்சாபில் உள்ள மொஹாலி எனுமிடத்தில் BRIC – தேசிய வேளாண் உணவு உற்பத்திக் கல்வி நிறுவனத்தினை (BRIC-NABI) அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.