இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முறையே 2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான இரண்டு ஆண்டு காலத்திற்குச் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின் (ISA) தலைமை மற்றும் இணைத் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய நிலக்கரி நிறுவனமானது (CIL) நவம்பர் 01 ஆம் தேதியன்று கொல்கத்தாவில் உள்ள அதன் தலைமையகத்தில் அதன் 50வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடியது.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) 352வது ஆளுகைக் குழு கூட்டம் ஆனது ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.
கோலின்ஸ் அகராதியானது அதன் 2024 ஆம் ஆண்டின் சிறந்தச் சொல்லாக "brat" (summer-living ideal என்று பெயர் மாற்றப்பட்ட இசைத் தொகுப்பின் தலைப்பு) என்ற சொல்லினை அறிவித்துள்ளது.
தென் கொரியக் குடியரசின் யாங் ஜி-இன் மற்றும் சீனாவின் லியு யுகுன் ஆகியோர் ISSF அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்தத் தடகள வீரருக்கான விருதைப் பெற்று உள்ளனர்.
DBS பாங்க் இந்தியா ஆனது, 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக (BCWI) தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.