ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆனது விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் ஆகிய நகரங்களை இணைக்கும் ‘Sky Meets Sea’ என்ற, கடலில் மிதக்கும் புதியதொரு விமானச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்புத் தளவாட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘அஸ்மி’ எனப்படும் 550 இயந்திரத் துப்பாக்கிகளை இந்திய இராணுவம் தனது படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
லடாக்கின் முதல் போலோ மைதானம் ஆனது கோஷன் டிராஸ் பகுதியில் திறக்கப் பட்டுள்ளது.
பெங்களூருவின் முதல் எண்ணிம மக்கள்தொகைக் கடிகாரம் ஆனது கர்நாடகா மற்றும் நாட்டின் மக்கள்தொகை பற்றிய நிகழ்நேர மதிப்பீடுகளை அணுகுவதற்காக சமூகப் பொருளாதார மாற்றக் கல்வி நிறுவனத்தில் நிறுவப் பட்டுள்ளது.
தேசியப் புலனாய்வு முகமை ஏற்பாடு செய்த இரண்டு நாட்கள் அளவிலான 'தீவிரவாத எதிர்ப்பு மாநாடு-2024' ஆனது புது டெல்லியில் நடத்தப் பட்டது.
இந்திய நாட்டின் திறன்பேசி சந்தையானது 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் எண்ணிக்கைகளின் அடிப்படையில் உலகளவில் இரண்டாவது பெரியச் சந்தையாகவும் மதிப்பின் அடிப்படையில் மூன்றாவது மிகப்பெரியச் சந்தையாகவும் உருவெடுத்துள்ளது.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் ஆனது, இந்தியாவிற்கான சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் இந்தியாவினை மிக முக்கிய உலகச் சுற்றுப் பயண இடமாக மேம்படுத்துவதற்காகவும் இலண்டனில் நடைபெற்ற உலக சுற்றுப் பயணச் சந்தை நிகழ்ச்சியில் (WTM) பங்கேற்றது.
சமோவா நாடானது 27வது காமன்வெல்த் அரசு தலைவர்கள் கூட்டத்தினை (CHOGM) 'One Resilient Common Future: Transforming our Commonwealth' என்ற ஒரு கருத்துருவில் நடத்தியது.