பிரபல தமிழ் சிறுகதை எழுத்தாளரும் பேச்சாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் காலமானார்.
இரண்டாவது இந்திய இராணுவப் பாரம்பரிய விழாவானது (IMHF) புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தியாவின் மத்திய குழந்தைத் தத்தெடுப்பு மூல ஆணையம் (CARA) ஆனது சட்டப் பூர்வமான குழந்தைத் தத்தெடுப்புகளை ஊக்குவிப்பதற்காக நவம்பர் மாதத்தினைத் தேசியக் குழந்தைத் தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடுகிறது.
இந்தியா-CARICOM (கரீபிய நாட்டுச் சமூக அமைப்பு) இணை ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் ஆனது சமீபத்தில் நடைபெற்றது.
நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான தேசிய அனல் மின் கழக லிமிடெட் (NTPC) ஆனது, 2024 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று தனது 50வது உருவாக்கத் தினத்தைக் கொண்டாடியது.
இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC ஆனது, கார்பன் டை ஆக்சைடினை மெத்தனாலாக மாற்றும் உலகின் முதல் ஆலையை மத்தியப் பிரதேசத்தின் விந்தியாச்சல் பகுதியில் அமைந்துள்ள அதன் உற்பத்தி மையத்தில் திறந்து வைத்துள்ளது.
உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் கோப்பர்நிகஸ் பருவநிலை மாற்றச் சேவை (C3S) அறிக்கை ஆகியவை 2024 ஆம் ஆண்டு ஆனது தொழில்துறைக்கு முந்தைய கால கட்டத்திலிருந்து பதிவான மிக வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளது.
'பிராந்திய மற்றும் சார்பு நிலைப் பிராந்தியங்களில் வழக்கமான ஆயுதக் கட்டுப்பாடு -Conventional arms control at the regional and subregional levels' என்ற பாகிஸ்தானின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
179 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், இஸ்ரேல் நாடு வாக்களிப்பில் இருந்து விலகியது என்ற நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு இந்தியாவாகும்.