TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 14 , 2024 8 days 50 0
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாணவிகளுக்கு பாதுகாப்பான, ஆதரவான சூழலை உருவாக்கும் நோக்கத்தில், புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையானது ‘காவல்துறை அக்கா’ என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை எனுமிடத்தில் கொள்ளிடம் ஆற்றில் நிலவி வரும் மனித-முதலை மோதலைக் குறைப்பதற்காக வேண்டி வனத் துறையானது முதலைகள் வளங்காப்பு மையத்தினை அமைக்க உள்ளது.
  • கிராண்ட்மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம், 2024 ஆம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்ற நிலையில் கிராண்ட் மாஸ்டர் V பிரணவ் சேலஞ்சர்ஸ் பிரிவில் பட்டத்தை வென்றார்.
  • தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் என்ற புதினம் லெடிசியா இபானெஸ் என்பவரால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • இந்திய சாலைகள் மாநாட்டுக் கூட்டத்தின் நான்கு நாட்கள் அளவிலான 83வது வருடாந்திர அமர்வு ஆனது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் நடைபெற்றது.
  • நவிகா சாகர் பரிக்ரமா 2 எனப்படும் உலகளாவிய சுற்றுப்பயணத்தை மேற் கொண்டு உள்ள இந்தியக் கடற்படையின் INSV தரிணி என்ற கப்பல் ஆனது, ஆஸ்திரேலியாவில் உள்ள அதன் முதல் இடைநிறுத்தத் துறைமுகத்தை வந்தடைந்தது.
  • அனிஷ் சர்க்கார் என்ற இந்தியச் சதுரங்க வீரர், அவரது மூன்று வயதில் சர்வதேசச் சதுரங்கக் கூட்டமைப்பினால் தரவரிசைப் படுத்தப்பட்ட உலகின் இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • எஜுகேஷன் வேர்ல்டு அமைப்பின் 2024-2025 ஆம் ஆண்டு உலக இந்தியப் பள்ளிகள் தர வரிசை விருதுகளில், JBCN கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணால் தலால், ஆண்டின் சிறந்த கல்வித் தலைவராகக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் இந்திய போலோ வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான ஹரிந்தர் சிங் சோதி சமீபத்தில் காலமானார்.
  • ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, 2024 ஆம் ஆண்டு S&P உலகப் பெரு நிறுவன பொறுப்பு மதிப்பீடு (CSA) தரவரிசையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மிகவும் நிலையான அலுமினிய உற்பத்தி நிறுவனமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்