TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 15 , 2024 7 days 42 0
  • கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை தொகுதியானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சர்வதேச பண்டைய கலை விழா மற்றும் கருத்தரங்கம் ஆனது புது டெல்லியில் நடத்தப் பட்டது.
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது பெண் தொழில்முனைவோருக்கு கடன், திறன் மேம்பாடு, ஆலோசனை சேவைகள், வலையமைப்பு வாய்ப்புகளை வழங்கச் செய்வதற்காக பெங்களூரு, சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் ஜெய்ப்பூரில் ஐந்து நாரி சக்தி கிளைகளைத் தொடங்கியுள்ளது.
  • உலக நகர்ப்புற மன்றத்தின் (WUF12) 12வது அமர்வு ஆனது எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றது.
  • சுதந்திரப் போராட்ட வீரரும்  மேவார் பிரஜா மண்டல் போராளியுமான ராஜஸ்தானைச் சேர்ந்த மதன் மோகன் சோம்தியா, சமீபத்தில் காலமானார்.
  • பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற சாரங்கி இசைக் கலைஞர் மகாராஷ்டிராவினைச் சேர்ந்த பண்டிட் ராம் நாராயண் சமீபத்தில் காலமானார்.
  • இந்தியாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பினாகா பல்லடுக்கு ஏவுகணை ஏவல் அமைப்பினை வாங்கிய முதல் நாடாக ஆர்மீனியா மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்