TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 16 , 2024 12 days 105 0
  • பட்டாசு ஆலைகளில் பணி புரியும் போது விபத்தில் உயிரிழந்தப் பெற்றோர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் இராஜ் கௌதமன் காலமானார்.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, O.P. ஜிண்டால் உலகப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, 'அரசியலமைப்பு அருங்காட்சியகத்திற்கு' என்று வருகை தரும் பார்வையாளர்களை நன்கு வழி நடத்துவதற்காக ஒரு எந்திர மனிதனை உருவாக்கியுள்ளது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து ‘திரவ மற்றும் வெப்ப அறிவியல்’ ஆராய்ச்சிக்கான சிறப்பு மையத்தினை நிறுவியுள்ளது.
  • முதன்முறையாக, சுமார் 1,000 நபர்களை உள்ளடக்கிய மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படையின் (CISF) அனைத்து மகளிர் படைப்பிரிவினை நிறுவுவதற்கான முடிவிற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • மின் உற்பத்தித் துறையின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை ஒரு நோக்கமாகக் கொண்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் மின்சார அமைச்சர்களின் மாநாட்டிற்கு மத்திய மின்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.
  • தெற்காசிய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (SATRC-25) 25வது கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • பிரேசில் நாடானது, G20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டினை 2024 ஆம் ஆண்டு நவம்பர் 18 – 19 ஆம் தேதிகளில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடத்தவுள்ளது.
  • பிரிட்டனைச் சேர்ந்த சமந்தா ஹார்வி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு நாள்  என்பது குறித்த ‘Orbital’ என்ற தனது புதினத்திற்காக 2024 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசினை வென்றுள்ளார்.
  • கேரள ஆளுநருக்கான கூடுதல் செயலாளர் டாக்டர் தேவேந்திர குமார் தோதாவத் ‘Maa-Mother’ என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • டிஃபென்ஸ் ஸ்பேஸ் ஏஜென்சி என்ற நிறுவனமானது, முதன் முறையாக அந்தரிக்சா அபியாஸ்-2024 எனப்படும் 3 நாட்கள் அளவிலான விண்வெளி பாதுகாப்புப் பயிற்சியை புது டெல்லியில் நடத்தியது.
  • பங்கஜ் அத்வானி, கத்தாரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு IBSF உலக பில்லியர்ட்ஸ் (மேசைக்கோற் பந்தாட்டம்) சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தனது 28வது உலகப் பட்டத்தினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்