TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 20 , 2024 2 days 41 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து, தனது பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC) கூட்டத்திற்குக் காணொளி வாயிலாக தலைமை தாங்கினார்.
  • அசாமின் தர்ரங்கா என்னுமிடத்தில் இந்திய-பூடான் எல்லையினூடே முதலாவது  ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி (ICP) ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • BBL குழுமத்தின் நிறுவனர் T.P. கோபாலன் நம்பியார் சமீபத்தில் காலமானார்.
  • GMR ஹைதராபாத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (GHIAL) ஆனது 2024 ஆம் ஆண்டு சவூதி விமான நிலையக் கண்காட்சியில் எண்ணிமக் கண்டுபிடிப்புகளில் அதன் முன்னேற்றங்களுக்காக ‘விமான நிலையங்களுக்கானச் சிறப்பு விருதுகளை’ பெற்றுள்ளது.
  • பிரேசில் நாட்டின் வால்டெசி உர்கிசா புதிய இன்டர்போல் அமைப்பின் (சர்வதேசக் காவல்துறை) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • துபாய் நகரம் ஆனது துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், அதன் முதல் வான்வழி வாடகை வாகன சேவை நிலையத்தினை (வெர்டிபோர்ட்) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜப்பானின் அரசக் குடும்பத்தின் மிகவும் மூத்த உறுப்பினரும் பேரரசரின் பெரிய அத்தையுமான இளவரசி மிகாசா சமீபத்தில் காலமானார்.
  • மொரீஷியஸ் நாட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணியானது, அந்நாட்டுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதையடுத்து அந்நாட்டின் பிரதமராக நவீன் ராம்கூலம் பதவியேற்று உள்ளார்.
  • Nvidia மற்றும் SoftBank Corp ஆகியவை செயற்கை நுண்ணறிவு மற்றும் 5G இயக்கத்தினை ஒரே நேரத்தில் இயக்க கூடிய உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 5G தொலைதொடர்பு வலையமைப்பின் சோதனையினைத் தொடக்கி உயுள்ளன.
    • இந்தச் செயல்முறையானது செயற்கை நுண்ணறிவு ரேடியோ அணுகல் வலை அமைப்பு (AI-RAN) எனப்படும்.
  • உலகக் கருணை தினம் ஆனது உலகில் ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்