18 வயதான M. காசிமா அமெரிக்காவில் நடைபெற்ற 6வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இளம் கேரம் உலக சாம்பியன் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பெகாட்ரானின் ஐபோன் உற்பத்தி ஆலையின் 60% பங்குகளை வாங்குவதற்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் M. கருணாகர் ரெட்டி முதல் ஜாதவ் பாயேங் சர்வதேச விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குறை கடத்தி உற்பத்தியின் மீதான தன்னிறைவில் குஜராத் மாநிலத்தின் முன்னணி நிலையை உறுதி செய்வதற்காக என்று குஜராத் மாநில அரசானது இந்தியாவின் முதல் ‘குஜராத் குறைகடத்தி உற்பத்தி கொள்கை 2022-2027 என்ற கொள்கையினை அறிமுகப் படுத்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பயணத்திற்குப் பிறகான 17 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிற்கு இந்தியப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய மின் கட்டமைப்பு மூலமாக நேபாளத்திலிருந்து வங்காளதேசத்திற்கு மின் பகிர்மானத்தினை மேற்கொள்வதற்காக என்று முதலாவது முத்தரப்பு மின் பரிமாற்ற ஒப்பந்தத்தில் 3 நாடுகளும் இணைந்துள்ளது.
நைஜீரிய அழகியினைத் தோற்கடித்து, டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த விக்டோரியா கிஜார் தெயில்விக் 73வது பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தினை வென்றுள்ள நிலையில் டென்மார்க் நாட்டில் இருந்து இந்தப் பட்டத்தினை வென்ற முதல் நபர் இவராவார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது ஊடகச் சொத்துக்களை உலகளாவிய ஊடக நிறுவனமான வால்ட் டிஸ்னியின் இந்திய வணிகத்துடன் இணைக்கும் புதிய கூட்டு முயற்சியை உருவாக்கியுள்ளது.
ஒரு கடுமையான வறட்சியானது உலகின் மிகப்பெரிய செயற்கை ஏரியான கரிபா ஏரியின் நீர் மட்டத்தினை மிகவும் குறைவான நிலைக்குக் குறையச் செய்துள்ள ஒரு நிலையில் இது ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் மின்சாரத் தேவைகளின் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்யும் அணையை மூடும் நிலைக்குத் தள்ளும் என்ற ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைப் பருவ பாலியல் சுரண்டல்கள், அத்துமீறல்கள் மற்றும் வன்முறையைத் தடுப்பது மற்றும் அதைக் குணப்படுத்துவதற்கான உலக தினமானது ஆண்டுதோறும் நவம்பர் 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.