சென்னை அருகே ஆவடியில் உள்ள பட்டாபிராம் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 21 அடுக்குகள் கொண்ட டைடல் தொழிற்துறைப் பூங்காவினை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
பெரும் புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளர் K.C.பன்சால் வளர்ந்து வரும் நாடுகளில் அறிவியல் முன்னேற்றத்திற்காக உலக அறிவியல் அகாடமியின் (TWAS) புத்தாய்வு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசியத் தூய்மை கங்கை இயக்கத்தின் (NMCG) 57வது செயற்குழு (EC) அமர்வில், 1,062 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கியப் பேரரசில் நடைபெற்ற 38வது லீட்ஸ் சர்வதேச திரைப்பட விருது விழாவில் மனோஜ் பாஜ்பாயின் ‘The Fable’ சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.
பாரத் ஸ்டேட் வங்கியானது, தனது புகழ்பெற்ற மும்பையில் உள்ள ஹார்னிமன் வட்டக் கிளையின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அச்சிடப்பட்ட 100 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயத்தினை வெளியிட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது, "Devolution to Development - மேம்பாட்டிற்கான அதிகாரப் பகிர்வு" என்ற தலைப்பில் முதல் வகையிலான ஒரு நாள் அளவிலான நிதி ஆணையங்களின் மாநாட்டினைப் புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள துத்மராஸ் எனப்படுகின்ற ஒரு சிறிய கிராமமானது, ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பினால் (UNWTO) அதன் சிறந்த சுற்றுலா கிராம மேம்பாட்டுத் திட்டத்திற்காகத் தேர்வு செய்துள்ளது.
ரியோ நகரில் நடைபெற்ற வருடாந்திர G20 நாடுகளின் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவின் போது, பிரேசில் நாடானது G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பினை தென்னாப்பிரிக்காவிற்கு அதிகாரப் பூர்வமாக ஒப்படைத்தது.