TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2024 28 days 76 0
  • சென்னை அருகே ஆவடியில் உள்ள பட்டாபிராம் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 21 அடுக்குகள் கொண்ட டைடல் தொழிற்துறைப் பூங்காவினை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
  • பெரும் புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளர் K.C.பன்சால் வளர்ந்து வரும் நாடுகளில் அறிவியல் முன்னேற்றத்திற்காக உலக அறிவியல் அகாடமியின் (TWAS) புத்தாய்வு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தேசியத் தூய்மை கங்கை இயக்கத்தின் (NMCG) 57வது செயற்குழு (EC) அமர்வில், 1,062 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஐக்கியப் பேரரசில் நடைபெற்ற 38வது லீட்ஸ் சர்வதேச திரைப்பட விருது விழாவில் மனோஜ் பாஜ்பாயின் ‘The Fable’ சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.
  • பாரத் ஸ்டேட் வங்கியானது, தனது புகழ்பெற்ற மும்பையில் உள்ள ஹார்னிமன் வட்டக் கிளையின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அச்சிடப்பட்ட 100 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயத்தினை வெளியிட்டுள்ளது.
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது, "Devolution to Development - மேம்பாட்டிற்கான அதிகாரப் பகிர்வு" என்ற தலைப்பில் முதல் வகையிலான ஒரு நாள் அளவிலான நிதி ஆணையங்களின் மாநாட்டினைப் புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
  • சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள துத்மராஸ் எனப்படுகின்ற ஒரு சிறிய கிராமமானது, ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பினால் (UNWTO) அதன் சிறந்த சுற்றுலா கிராம மேம்பாட்டுத் திட்டத்திற்காகத் தேர்வு செய்துள்ளது.
  • ரியோ நகரில் நடைபெற்ற வருடாந்திர G20 நாடுகளின் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவின் போது, பிரேசில் நாடானது G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பினை தென்னாப்பிரிக்காவிற்கு அதிகாரப் பூர்வமாக ஒப்படைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்