TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 25 , 2024 27 days 114 0
  • ஏர் இந்தியா நிறுவனமானது, பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) CAR 21 அங்கீகாரமாக நிர்ணயிக்கப்பட்ட வடிவமைப்பு அமைப்பு ஒப்புதலை (DAO) பெற்றுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு உலக மண் மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • அஞ்சல் துறையானது அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் ஒழிப்பு - 2047 குறித்த நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி ‘Waves’ எனப்படும் தனது சொந்த இணையவழி ஒளிபரப்பு (OTT) தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • புனேவைச் சேர்ந்த ஷிவாங்கி தேசாய், 2024 ஆம் ஆண்டு மிஸ் சார்ம் இந்தியா பட்டத்தை வென்றுள்ளதோடு மேலும் வியட்நாமில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டு மிஸ் சார்ம் போட்டியில் இந்தியா சார்பான போட்டியாளராகப் பங்கேற்க உள்ளார்.
  • இந்திய மகளிர் ஹாக்கி அணியானது, சீன அணியினை வீழ்த்தி, மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் வெற்றிப் பெற்றது.
  • GAIL (இந்தியா) லிமிடெட் நிறுவனம் ஆனது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த நிதி மாற்றத்திற்கான 2024 ஆம் ஆண்டு SAP ACE விருதை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்