மத்திய அரசானது, புதுமைகளை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் பாதுகாப்பினை நன்கு மேம்படுத்துவதற்காகவும் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு வங்கியைத் தொடங்கியுள்ளது.
மூன்றாவது உலகளாவிய சரக்குப் போக்குவரத்து உச்சி மாநாடு (2024) ஆனது "Acting today to reach the opportunities of tomorrow" என்ற கருத்துருவின் கீழ் துபாயில் நடத்தப் பட்டது.
இந்தியாவின் 55வது சர்வதேச திரைப்பட விருது விழாவானது (IFFI) கோவாவில் தொடங்கியுள்ளது.
தாமஸ் மேத்யூ என்பவர் ‘Ratan Tata: A Life’ என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
கெளதம் அதானிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அமெரிக்க லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளையடுத்து, கென்ய அரசானது பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான அதானியின் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது.