அரியானாவின் சோனிபட் நகரில் உள்ள OP ஜிண்டால் உலகப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, தண்ணீரில் காணப்படும் பீனால் அல்லது பென்சீன் போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுக்களைத் துல்லியமாக கண்டறிவதற்காக ஒரு மலிவு விலையிலான மற்றும் கையடக்கமான (எளிதில் எடுத்து செல்லக் கூடிய) AroTrack எனப்படும் சாதனத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசியல் சாராத பின்னணியில் உள்ள இளையோர்களை அரசியலுடன் இணைக்கச் செய்வதற்காக என்று 2025 ஆம் ஆண்டு விக்சித் பாரத் இளம் தலைவர்கள் பேச்சு வார்த்தையானது புது டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசு ஆனது, லக்னோவில் உள்ள குக்ரைல் வனப்பகுதியில் இந்தியாவின் முதல் இரவு நேர சுற்றுப் பயண பூங்கா என்ற வசதியினை உருவாக்கி வருகிறது.
11வது ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் பிளஸ் (ADMM-Plus) ஆனது லாவோ மக்கள் குடியரசின் வியான்டியானே நகரில் கூட்டப்பட்டது.
இந்தியச் சூரியசக்திக் கூட்டணிக் கழகம் (SECI) ஆனது, சந்தை வழிமுறைகள் குறித்த தகவல் பரிமாற்றத்தினை மேம்படுத்துவதற்கும் பசுமை ஹைட்ரஜனில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் வேண்டி H2Global நிறுவனத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் நகரானது, அதிநவீன அழுத்தப்பட்ட உயிரி-எரிவாயு ஆலையுடன் கூடிய, இந்தியாவின் முதல் தன்னிறைவான கோசாலையினை தொடங்கி உள்ளது.
இந்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனமானது, மதிப்புமிக்கப் பசுமை உலக சுற்றுச்சூழல் விருது மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புப் பிரிவில் பசுமை உலகத் தூதர் என்ற மதிப்பு மிக்கப் பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் கரீபியன் சமூக அமைப்பு (CARICOM) இடையேயான உச்சி மாநாடு ஆனது கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்றது.
இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் Sea Vigil 24 எனப்படும் நான்காவது நாடு தழுவியக் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியானது நடத்தப்பட்டது.
ஆப்பிரிக்காவின் மேம்பாட்டில் தொழில்மயமாக்கலின் மாபெரும் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக என்று ஆண்டுதோறும் நவம்பர் 20 ஆம் தேதியன்று ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம் கொண்டாடப் படுகிறது.