TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 14 , 2018 2136 days 688 0
  • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ‘உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு – 2019 க்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரச்சாரத்தை தமிழ்நாடு அரசாங்கம் தொடங்கியது.
    • இதற்குமுன் தமிழ்நாடு அரசு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பின் முதலாவது பதிப்பை நடத்தியது.
  • ஜார்க்கண்ட் மாநில அரசானது அலுவலகப் பயன்பாட்டிற்காக மின் வாகனங்களை அறிமுகப்படுத்தியது. அரசாங்கப் பயன்பாட்டிற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை கொள்முதல் செய்யும் இந்தியாவின் ஐந்தாவது மாநிலமாகவும், கிழக்கிந்தியாவின் முதலாவது மாநிலமாகவும் ஜார்க்கண்ட் உருவெடுத்துள்ளது.
    • ஜார்க்கண்ட் மாநிலம் அறிமுகப்படுத்துவதற்கு முன், அலுவலகப் பயன்பாட்டிற்காக மின் ஊர்திகளை தில்லி, மஹாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கொள்முதல் செய்துள்ளன.
  • பஞ்சாப் மாநில சட்டசபையானது பஞ்சாப் நில மேம்பாட்டு திட்டங்கள் (ஹரியானா திருத்தம்) மசோதா, 2018-ஐ நிறைவேற்றியது. இதன் நோக்கமானது விவசாயிகளின் நீர்ப்பாசன பயன்பாட்டிற்காக மற்ற விவசாயிகளின் நிலங்களுக்கு அடியில் குழாய் பதிப்பை ஏற்படுத்துவதாகும்.
  • குன்மிங் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கிடையே புல்லட் இரயில் சேவையை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது. இந்த புல்லட் இரயிலானது அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகள் வழியே செல்லும்.
  • ஆசியான் உலக பொருளாதார மன்றமானது “ஆசியான் 4.0: தொழில்முனைவு மற்றும் நான்காவது தொழில் புரட்சி” என்ற கருத்துருவுடன் வியட்நாமின் ஹனோயில் தொடங்கியது.
  • சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கான இந்திய சங்கமானது (IATO - Indian Association of Tour Operators) ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையுடன் இணைந்து விசாகப்பட்டினத்தில் 34வது ஆண்டு மாநாட்டை நடத்தியது.
    • இம்மாநாட்டின் கருத்துருவானது, “குறிக்கோள்: 2022ல் 20 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” ஆகும்
  • நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலில் சிறப்பான பங்காற்றியதற்காக புகழ்பெற்ற ஐ.நா. நிறுவனங்களுக்கிடையேயான பணிக் குழு விருது (UNIATF - UN Interagency Task force) மனோஜ் ஜலானிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் சர்தார் சிங் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • லக்னோ நகராட்சியானது “குலே மீ சச் கீ காந்தி பஜாவோ - சீதி பஜாவோ” (திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக தகவல் அளித்தல்) என்ற திறந்த வெளியில் மலம் கழிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) - கரக்பூர் ஆனது ஆராய்ச்சியில் கூட்டுமுயற்சி, திறன் கட்டமைப்பு மற்றும் இதர கல்விப் பங்களிப்புகளுக்கு உதவுவதற்காக கனடா கார்லீடோன் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டிற்கான துறையானது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் மீதான தேசியக் கருத்தரங்கை புது தில்லியில் நடத்தியது.
  • மத்திய விவசாய மற்றும் விவசாயி நலன் அமைச்சர் பால் பதனிடுதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியைத் (DIDF - Dairy Processing and Infrastructure Development fund) தொடக்கி வைத்தார்.
  • நேபாள இராணுவம் சீனாவுடன் இரண்டாவது கூட்டுப் படைப் பயிற்சியான சாகர்மாதா தோழமை - 2 (Sagarmatha Friendship - 2) என்ற பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கிறது.
    • சமீபத்தில் நேபாளம் பீம்ஸ்டெக் நாடுகளின் முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்