சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் முதல் உலகளாவிய மாநாடு ஆனது புது டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
“Beyond the Higgs Boson: The W Boson and Dr. Ashutosh Kotwal's Quest for the Unknown“ எனப்படும் புத்தகம், மானிக் கோட்வால் என்பவரால் எழுதப் பட்டு, ஜெர்ரி பின்டோ என்பவரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற நரசாபுரம் சரிகை கைவினைப்பொருள் ஆனது, மதிப்பு மிக்க புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
தொழிலதிபரும் எஸ்ஸார் குழுமத்தின் தலைவருமான சஷிகாந்த் ரூயா காலமானார்.
அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ப்ரோஜித் பிஹாரி முகர்ஜி, “Brown Skins, White Coats: Race Science in India, 1920–66” என்ற அவரது புத்தகத்திற்காக 2024 ஆம் ஆண்டு ஃபைசர் விருதினைப் பெற்றுள்ளார்.
இந்தியா தனது முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை லடாக்கின் லே எனுமிடத்தில் திறந்து வைத்துள்ளது.
ஹிண்டால்கோ நிறுவனமானது, டவ் ஜோன்ஸ் நிலைத் தன்மைக் குறியீட்டில் (DJSI) உலகின் மிகவும் நிலையான அலுமினிய உற்பத்தி நிறுவனமாகத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக (2020-2024) இடம் பெற்றுள்ளது.