தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) 91வது பொதுக்குழு கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்திய இரசாயன சபைக்கு (ICC) 2024 ஆம் ஆண்டிற்கான இரசாயன ஆயுதத் தடை அமைப்பின் (OPCW) தி ஹேக் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் 'One Health' என்ற ஒரு கருத்துருவுடன் அமைக்கப்பட்ட உடல்நலம் குறித்த காட்சி அரங்கிற்கு, புது தில்லியில் நடைபெற்ற 43வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (IITF) சிறப்புப் பாராட்டுப் பதக்கம் வழங்கப் பட்டது.
அல்பேனியாவில் நடைபெற்ற 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக கேடட்ஸ் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் ஐதராபாத்தை சேர்ந்த திவித் ரெட்டி (8) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு சர்வதேச கீதா மஹோத்சவமானது, ஹரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரத்தில் நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது, ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டால் விரைவான எதிர் நடவடிக்கையினை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக, ஜம்மு நகரில் தேசியப் பாதுகாப்புப் படைக்கான (NSG) ஒரு நிரந்தர மையத்தினை நிறுவி உள்ளது.
உலக கைவினைப் பொருட்கள் சபை (WCC) ஜம்மு & காஷ்மீரில் பல நூற்றாண்டுகள் மிக பழமையான செயல்முறைகளுடன் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களுக்கு ‘கைவினையின் நம்பகத்தன்மை முத்திரை’ என்று சான்றளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.
ஈவா என்ற பூனை ஆனது, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விமான நிலையத்தில் பிரத்தியேக விலங்குகளுக்கான தனிமைப்படுத்தல் சான்றிதழ் சேவை (AQCS) தொடங்கப் பட்ட பிறகு, கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் மூலம் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்ட முதல் விலங்கு ஆகும்.
உலகின் மிக வயதான ஆணான ஐக்கியப் பேரரசின் பிரிட்டன் ஜான் டினிஸ்வுட் (112) சமீபத்தில் காலமானார்.
ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான டோமிகோ இடூகா தற்போது உலகின் மிக வயதான மனிதர் ஆக திகழ்கிறார்.