TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 6 , 2024 25 days 81 0
  • VINBAX-2024 எனப்படுகின்ற ஐந்தாவது இந்திய-வியட்நாம் கூட்டு களப் பயிற்சியானது பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகரில் நடைபெற்றது.
  • 12வது சர்வதேசச் சுற்றுலாச் சந்தையானது (ITM) அசாமின் காசிரங்கா என்னுமிடத்தில் நடத்தப் பட்டது.
  • ஓடிசாவின் புவனேஸ்வர் நகரில் 59வது அகில இந்தியக் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) / தலைமை ஆய்வாளர்கள் (IG) மாநாடு ஆனது நடத்தப் பட்டது.
  • BIPEX-2024 எனப்படும் தேசிய அஞ்சல் கண்காட்சியானது பீகாரின் பாட்னா நகரில் நடத்தப் பட்டது.
  • மகாராஷ்டிரா அரசானது, 'ஷாசன் அப்லியா தாரி' (வீட்டு வாசலில் அரசின் சேவை) என்ற முன்னெடுப்பிற்காக மதிப்புமிக்க SKOCH விருதைப் பெற்றுள்ளது.
  • புது தில்லியில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய புவியிடம் சார் தகவல் மேலாண்மையின் (UNGGIM) 13வது அனைத்து உறுப்பினர் கூட்டத்தினை இந்தியா நடத்தியது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் என்பவரை கூட்டாட்சித் துறைப் புலன் விசாரணை அமைப்பின் (FBI) அடுத்த இயக்குநராக அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கப் பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பணியமர்த்தியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்