தமிழ்நாடு மாநில அரசானது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, மாநிலத் திட்ட ஆணையத்தின் பதவி வழித் துணைத் தலைவராக நியமித்துள்ளது.
யுனிசெஃப் அமைப்பானது, தனது ஆவணங்களில் தமிழகத்தில் உள்ள SCARF அமைப்பின் மனநோய்க்கான தடுப்பு மற்றும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் (PEPP) மற்றும் இளையோர் மனநலச் சேவைகளுக்கான வள மையம் (rYMs) ஆகிய இரண்டு திட்டங்களைக் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (IISF) ஆனது, "Transforming India into an S&T-driven Global Manufacturing Hub (இந்தியாவினை அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மூலமாக இயக்கப்படும் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுதல்") என்ற கருத்துருவுடன் குவஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் நடைபெற்றது.
இந்திய இராணுவம் ஆனது, இந்திய இராணுவ அதிகாரிகளின் தொழில்முறைக் கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதற்காக "ஏகலவ்யா" என்ற புனைப்பெயர் கொண்ட இந்திய இராணுவத்திற்கான இயங்கலை வழி கற்றல் தளத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்தாபானி வனவிலங்கு சரணாலயம் ஆனது புலிகள் வளங்காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் 8வதும் மற்றும் இந்தியாவின் 57வது புலிகள் வளங் காப்பகமாகும்
மத்தியப் பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசியப் பூங்காவினை புலிகள் வளங்காப்பகமாக அறிவிக்க தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையம் (NTCA) ஒப்புதல் அளித்துள்ளது.
யுனெஸ்கோ அமைப்பானது, மதம், பாரம்பரியம் மற்றும் தேயிலைச் சுற்றுலாவை வளர்ப்பதில் மாநிலத்தின் முன்னேற்றத்தை நன்கு எடுத்துக்காட்டும் விதமாக மேற்கு வங்காளத்தினைப் பாரம்பரியச் சுற்றுலாவிற்கான முன்னணி இடமாக அங்கீகரித்து உள்ளது.
பொதுவாக IVD என அழைக்கப் படுகின்ற சர்வதேசத் தன்னார்வலர் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 05 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.