TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 8 , 2024 14 days 57 0
  • தமிழ்நாடு மாநிலமானது, FICCI Turf 2024-14வது சர்வதேச விளையாட்டு மாநாட்டில் ஒரு விருதையும், 'விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம்' என்ற விருதுகளையும் பெற்றுள்ளது.
  • இந்திய ஸ்குவாஷ் போட்டியின் (சுவர் பந்து) ‘Old Fox’ என்று அழைக்கப் படுகின்ற, ஆறு முறை தேசிய சாம்பியன் பட்டமும் அர்ஜுனா விருது பெற்றவருமான பிரிகேடியர் ராஜ் மஞ்சந்தா காலமானார்.
  • கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, சதுரங்கப் போட்டியில் மதிப்பு மிக்க 2800 ELO தரவரிசையினை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது, 2025 ஆம் ஆண்டின் மகா கும்பமேளா திருவிழா என்பதனை முன்னிட்டு மகா கும்பமேளா பகுதியை ஒரு புதிய மாவட்டமாக அறிவித்து ள்ளது.
  • பிலிப்பைன்ஸ் நாட்டின் இராணுவ சுகாதார சேவைப் பணியில் உள்ள ஆலோசகரும், பிலிப்பைன்ஸ் நாட்டினைச் சேர்ந்த செவிலியருமான மரியா விக்டோரியா ஜுவான், 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்டர் கார்டியன்ஸ் உலகளாவிய செவிலியர் விருதினைப் பெறுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 81 போலியோ பாதிப்புகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
  • கிளாஸ்கோவில் பிறந்த ஸ்காட்லாந்து நாட்டினை சேர்ந்த இந்தியப் பாரம்பரியத்தின் சீக்கிய கலைஞரான ஜஸ்லீன் கௌர், தனது 'அல்டெர் அல்டார்' கண்காட்சிக்காக 2024 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க டர்னர் பரிசை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்