பாரத் எர்த் மூவர்ஸ் (BEML - Bharat Earth Movers Limited) நிறுவனமானது அண்மையில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் சரக்கு லாரியை தனது மைசூர் ஆலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிங்கரவுலியில் உள்ள நார்தர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட்டில் (Northern Coalfields Limited) பயன்படுத்தப்படும்.
இந்திய அஞ்சல் பணவழங்கீடுகள் வங்கியானது (IPPB - India Post Payments Bank) ஒழுங்குபடுத்தப்படாத சில்லறை விற்பனையாளர்களுக்கான பணவழங்கீடு வலையமைப்பை உருவாக்க பணவழங்கீடு தொழில்நுட்ப நிறுவனமான நிதிநிலைக்குரிய மென்பொருள்கள் மற்றும் அமைப்புகள் (Financial Software and Systems- FSS) என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் தனது புதிய பங்குகளை வழங்குதல் அல்லது அனைத்து பங்குகளையும் மாற்றுதல் போன்றவற்றை டீமட் (அதாவது மின்னணு) முறையில் வழங்குவதை மத்திய பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகமானது கட்டாயமாக்கியுள்ளது.
மாஸ்கோவில் வர்த்தக, பொருளாதார, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் கலாச்சாரம் மீதான இந்திய-ரஷ்ய அரசாங்கத்திற்கு இடைப்பட்ட ஆணையத்தின் (IRIGC-TEC/ India-Russia Inter-Governmental Commission on Trade, Economic, Scientific, Technological and Cultural Cooperation) 23-வது கூட்டம் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்திய பிரதிநிதிக் குழுவிற்கு தலைமைத் தாங்கினார்.
IRIGC-TEC ஆனது ஆண்டுதோறும் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் ஒரு நிலையான அமைப்பாகும்.