இந்தியாவின் முதல் பெரு நிறுவன மயமாக்கப்பட்ட ஒரு முக்கியத் துறைமுகமான காமராஜர் துறைமுகம் ஆனது (எண்ணூர்) சமீபத்தில் அதன் வெள்ளி விழாவினைக் கொண்டாடியது.
கேந்திரிய வித்யாலயா (KV) சங்கதன் ஆனது தேனியில் தனது முதல் பள்ளியை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் EPFO நிறுவனம் ஆனது, நாட்டில் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை சீர்திருத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான அதன் தொடர்ச்சியான பல்வேறு என்று முயற்சிகளுக்காக 2024 ஆம் ஆண்டு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான மதிப்பு மிக்க ISSA நல்ல நடைமுறை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் 19வது அமர்வு ஆனது பராகுவே குடியரசில் நடைபெற்றது.
“வின்பாக்ஸ் 2024” எனப்படுகின்ற வியட்நாம்-இந்தியா இடையிலான 5வது இருதரப்பு இராணுவப் பயிற்சியானது ஹரியானா மாநிலம் அம்பாலா நகரில் நடைபெற்றது.
உலக வர்த்தக அமைப்பின் பொதுச் சபையானது, இரண்டாவது நான்கு ஆண்டு காலத்திற்கு, டாக்டர் என்கோசி ஒகோன்ஜோ-இவேலாவை மீண்டும் அதன் தலைமை இயக்குநராக நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கு தலைமை தாங்கும் முதல் பெண்ணும் முதல் ஆப்பிரிக்க (நைஜீரியா) நாட்டவரும் இவரே ஆவார்.
BASIC எனும் கணினி நிரலாக்க மொழியின் இணை கண்டுபிடிப்பாளரான பேராசிரியர் தாமஸ் யூஜின் கர்ட்ஸ் சமீபத்தில் காலமானார்.
SBI வங்கியின் அட்டை வழங்கீட்டு நிறுவனம் ஆனது, புழக்கத்தில் உள்ள அதன் கடன் அட்டைகளின் எண்ணிக்கையானது 20 மில்லியனை விஞ்சியதாக அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், HDFC வங்கியானது 20 மில்லியன் அட்டைகள் என்ற மைல்கல்லை எட்டியது.