சோனாய்-ரூபாய் வனவிலங்கு சரணாலயத்தில் வங்காளப் புலி காணப்படுவதற்கான முதல் புகைப்பட ஆதாரத்தினை அசாம் வனத்துறை கைப்பற்றியுள்ளது.
சிறு நிதி வங்கிகள் (SFBs) ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) மூலம் முன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதிகளை வழங்க அனுமதிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 21 ஆம் தேதியினை உலக தியான தினமாக அறிவிப்பதற்காக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா இணை அனுசரணை ஒன்றை வழங்கியுள்ளது.
நுண் திரவ யூரியா மற்றும் நுண் திரவ DAP ஆகியவற்றை அறிமுகப்படுத்திய உர உற்பத்தி நிறுவனமான IFFCO, தற்போது நுண் NPK ஊட்டச்சத்து உரத்தினை உருவாக்கி உள்ளது.