தமிழக அரசானது, உ.வே சுவாமிநாதரின் பிறந்தநாளான பிப்ரவரி 19 ஆம் தேதியினை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கடைப்பிடிக்க உள்ளது.
கோட்டை அமீர் வகுப்புவாத நல்லிணக்க விருதிற்கான பரிசுத் தொகையை 25,000 ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது உலகிலேயே முதன் முறையாக, குழந்தைக் கருவின் மூளையின் 5,132 மூளைப் பகுதிகளின் ஒரு விரிவான முப்பரிமாண உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றிற்கு வருகை தரும் பக்தர்களின் மிக துல்லியமான எண்ணிக்கை கணக்கீட்டினை உறுதி செய்வதற்காக 2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் நன்கு செயல்படும் ஒளிப்படக் கருவிகள் நிறுவப்பட உள்ளது.
மத்தியக் கல்வித் துறை அமைச்சகம் ஆனது, சைகை மொழிக்காகப் பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் பட்ட பிரதான் மந்திரி e-VIDYA 31 என்ற DTH ஊடகத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
ஐஎன்எஸ் துஷில் எனும் இந்தியாவின் ரேடாருக்குப் புலப்படாத வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு எறிகணை போர்க் கப்பலானது, ரஷ்யாவின் கலினின்கிராட் எனுமிடத்தில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் ஒருங்கிணைந்த ஷேக் எனப்படும் அரிசியிலிருந்து எடுக்கப்படும் மதுபானம் ஆனது, யுனெஸ்கோ அமைப்பின் தொட்டு உணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.