TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 16 , 2024 6 days 38 0
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் கழகத்திற்கான வருடாந்திர மற்றும் வாழ்நாள் சந்தா, அதற்கான மறு சேர்க்கை கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை அதிகரிப்பதற்கும், இணைய வழியில் பத்திரம் வழங்குவதற்கும் வழிவகை செய்யும் வகையிலான மசோதாவினை தமிழ்நாடு சட்டசபை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் என்னுமிடத்தில் உள்ள தமிழ் சீர்திருத்தவாதி ஈ.வெ.இராமசாமி அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினைத் தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்கள் திறந்து வைத்துள்ளனர்.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது பாதுகாப்பு மற்றும் ஆற்றல் செயல்திறன் ஆகியவற்றில் ஓட்டுநர் நடத்தையின் மீது நிகழ்நேர மதிப்பீட்டை வழங்குகின்ற சரக்குந்து ஓட்டுநர் மதிப்பீட்டுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தமிழ்நாடு சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் முதல் முறையாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக இருக்கும் குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்வதற்காக PAATHAI (ஆளுமையினை உறுதிப்படுத்தும் அணுகுமுறை, மாற்றம், ஒரு முழுமையான அணுகுமுறை நடவடிக்கைகள்) எனும் முன்னெடுப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் அந்நிய நேரடி முதலீடு ஆனது (FDI) 26% அதிகரித்து 42.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இதன் மூலம் இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீடு ஆனது 1 டிரில்லியன் டாலர்களை எட்டி உள்ளது.
  • 4வது இந்திய இணைய ஆளுகை மன்றம் (IIGF)  2024 ஆனது “இந்தியாவிற்கான இணைய நிர்வாகத்தில் புத்தாக்கங்கள் - Innovations in Internet Governance for India” என்ற கருத்துரு உடன் புது டெல்லியில் நடைபெற்றது.
  • மூத்த திரைப்படத் தயாரிப்பாளரான ஷாஜி N.கருண், மலையாளத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய வாழ்நாள் அளவிலான பங்களிப்பிற்காக 2023 ஆம் ஆண்டிற்கான மிக மதிப்பு மிக்க J.C. டேனியல் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து 2030 ஆம் ஆண்டு FIFA கால்பந்து உலகக் கோப்பை போட்டியினை நடத்த உள்ளன என்பதோடு மேலும் 2034 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியை சவுதி அரேபியா நடத்த உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டியின் பனிப்படிவு சார்ந்த போட்டிகளை லே நகரம் நடத்த உள்ளதோடு, குல்மார்க் நகரம் மற்றப் பனிப் பொழிவு சார் போட்டிகளை நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்