TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 17 , 2024 5 days 43 0
  • தமிழ்நாடு ,மாநில அரசானது, முதலீடுகளை மேற்கொள்ளவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் விரும்பும் ஜவுளி ஆலைகளுக்கு 6% வட்டி மானியத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, நடப்பு நிதியாண்டில் (2024-2025) 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
  • கடலோரப் பகுதிகளில் அத்துமீறல்களைத் தடுக்கும் முயற்சியில், தமிழக அரசானது 14 மாவட்டங்களில் கடலோரப் பிரிவுகளை நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • கர்நாடக இசைப் பாடகர் T.M. கிருஷ்ணாவிற்கு 'சங்கீத கலாநிதி M.S. சுப்புலட்சுமி விருது' என்ற தலைப்பிலான விருது வழங்குவதற்கு இசை அகாடமி மற்றும் தி இந்து பத்திரிக்கை வெளியீட்டு நிறுவனங்களுக்கு மதராஸ் உயர்நீதிமன்றம் தன் ஒப்புதலை அளித்துள்ளது.
  • தமிழகத்திற்குச் சொந்தமான ஆவின் பால் நிறுவனம் ஆனது, வைட்டமின் A மற்றும் D ஆகியவற்றைக் கொண்டு செறிவூட்டப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் என்ற ஒரு புதிய பால் ரகத்தினை அறிமுகப்படுத்த உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு தேசியப் பஞ்சாயத்து விருது விழாவில் கோவை மாவட்டத்தின் கீரநத்தம் பஞ்சாயத்து ‘சிறந்த தன்னிறைவு மிக்க உள்கட்டமைப்பு’ பிரிவில் விருதினை வென்றுள்ளது.
  • தஞ்சையில் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பு நிறுவனம் விண்வெளி சார் புத்தொழில் நிறுவனங்கள் துறையில் “சிறந்தப் புத்தொழில் நிறுவனங்கள் காப்பு நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு மையம்” ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் சென்னை கோட்டம் ஆனது, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்குள்ளாக புறநகர் வழித் தடங்களுக்கு குளிர்சாதன வசதியினைக் கொண்ட இரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் ரத்தபானி வனவிலங்குச் சரணாலயம் ஆனது இந்தியாவின் 57வது புலிகள் வளங்காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா, பிரான்சு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அரபிக் கடலில் "டெசர்ட் நைட்" என்ற முக்கிய வான் வழி போர் பயிற்சியை மேற்கொண்டன.
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் இராஜீவ் மேத்தா ஆசிய வாள்வீச்சுக் கூட்டமைப்பின் (FCA) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
  • டைம் இதழானது, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பை 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் 2024 ஆம் ஆண்டின் சிறந்த நபராக அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்