தமிழ்நாட்டின் துக்காட்சி எனுமிடத்தில் உள்ள ஆபத்சஹாயேஸ்வரர் கோயில் வளங் காப்புத் திட்டமும், மகாராஷ்டிராவின் மும்பையின் BJPCI என்ற வளங்காப்புத் திட்டமும் யுனெஸ்கோ அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான கலாச்சாரப் பாரம்பரியப் வளங்காப்பு விருதுகளை வென்றுள்ளன.
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியத் தரைக் கடலில் ஓர் மிக இளம் ஷார்ட்ஃபின் மாகோ சுறாவைக் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில் அருகி வரும் இந்த இனம் ஆனது இப்பகுதியில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மணிப்பூர் மாநில அரசானது, 1904 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நூபி லால் எழுச்சியின் போது நீதி மற்றும் சுதந்திரத்திற்காக போராடிய பெரும் வீரமிக்க பெண்களை கௌரவிப்பதற்காக நூபி லால் நுமித் 2024 நிகழ்வினை அனுசரித்தது.
உத்தரக்காண்ட் மாநில அரசானது, ஆயுர்வேதத்தினை மேம்படுத்துவதற்கும், நவீன சுகாதார அமைப்புகளில் அதன் ஒருங்கிணைப்பு குறித்து ஆராய்வதற்கும் உலக ஆயுர்வேத மாநாடு மற்றும் ஆரோக்யா கண்காட்சி 2024 ஆகியவற்றை நடத்தியது.
AVPN அமைப்பு ஆனது 2024 ஆம் ஆண்டு தெற்காசிய உச்சி மாநாட்டினை ‘New Realities, New Opportunities’ என்ற கருத்துருவில் சென்னையில் ஏற்பாடு செய்தது.
எலான் மஸ்க், நிகர சொத்து மதிப்பில் 400 பில்லியன் டாலர் மதிப்பினைத் தாண்டிய முதல் நபர் என்ற பெருமையுடன் ஒரு புதிய நிதிசார் மைல்கல்லை எட்டியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் ஃபிராங்கோயிஸ் பெய்ரூவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார்.